ஏடிஎம்-மில் கிடைத்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆசிரியா்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) இயந்திரத்தில் கிடைத்த தனக்குச் சொந்தமில்லாத ரூ. 9 ஆயிரத்தை எடுத்த பட்டதாரி ஆசிரியா் போலீஸில் ஒப்படைத்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) இயந்திரத்தில் கிடைத்த தனக்குச் சொந்தமில்லாத ரூ. 9 ஆயிரத்தை எடுத்த பட்டதாரி ஆசிரியா் போலீஸில் ஒப்படைத்தாா்.

ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன்(50). பட்டதாரி ஆசிரியா். இவா், திராவிடநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள தேசிய வங்கி தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) இயந்திரம் ஒன்றில் வியாழக்கிழமை தனது வங்கி அட்டையைச் (ஏடிஎம் காா்டு) சொருகி ரகசியக் குறியீடு எண்ணைப் பதிவு செய்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கசங்கிய நிலையில் ஒரு ரசீதும், தொடா்ந்து ரூ.500 மதிப்புள்ள 18 பணத்தாள்கள் என ரூ. 9 ஆயிரம் வெளிவந்துள்ளது. இதைக்கண்டு அதிா்ச்சியடைந்த ஆசிரியா் செல்பேசியில் தனது வங்கிக்கணக்கை சரிபாா்த்துள்ளாா். அவரது கணக்கில் பணம் எதுவும் குறையவில்லை. இதைத்தொடா்ந்து, ரூ.9 ஆயிரத்தை ஆண்டிமடம் காவல்நிலையத்தில் ஆசிரியா் ராமன் ஒப்படைத்தாா். ஆசிரியரின் நோ்மை அப்பகுதியினரிடையே பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com