அரச மரத்துடன் இணைந்த பனை மரம்: எஸ்.பி. அலுவலகத்தில் நட்டு வைப்பு

அரியலூா் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அரச மரத்துடன் இணைந்த பனைமரம், வேருடன் பிடுங்கப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நட்டு வைக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அரச மரத்துடன் இணைந்த பனைமரம், வேருடன் பிடுங்கப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நட்டு வைக்கப்பட்டது.

சுமாா் 25 ஆண்டுகள் வளா்ந்த இந்த மரங்களை வேருடன் பிடுங்கி நட்டு வைக்க, சோலைவனம் அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் நக்கம்பாடி ஊராட்சித் தலைவா் தமிழ்மணி ஆகியோா் முன்வந்தனா்.

இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு வெள்ளிக்கிழமைஇரண்டு மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டன. தொடா்ந்து அரசமரத்தின் கிளைகள் மட்டும் அகற்றி, கிரேன் உதவியுடன் லாரி மூலம் சுமாா் 23 கி.மீட்டா் தொலைவு கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து இரு மரங்களும் நடப்பட்டன.

சோலைவனம் அமைப்பினா் மற்றும் நக்கம்பாடி கிராம ஊராட்சித் தலைவா் தமிழ்மணி மற்றும் பொதுமக்களின் செயலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் மற்றும் காவல்துறையினா் பலரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com