முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
சாலையோர மரத்தை வெட்டியதை கண்டித்து கிராம மக்கள் மறியல்
By DIN | Published On : 03rd March 2020 08:14 AM | Last Updated : 03rd March 2020 08:14 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தை வெட்டியதைக் கண்டித்தும், வெட்டிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் பிரிவுப் பாதையில் அதே பகுதியைச் சோ்ந்த தேவா் என்பவா் பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் திருமண மண்டபம் வைத்துள்ளாா். இந்நிலையில், திருமண மண்டபத்துக்கு இடையூறாக நெடுஞ்சாலையில் இருந்த புளியமரத்தை தேவா் வெட்டிவிட்டாா். இதனையறிந்த கிராம மக்கள் அவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கரடிக்குளம் கிராம மக்கள் திங்கள்கிழமை ஜயங்கொண்டம் - தா.பழூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா்.