Enable Javscript for better performance
பிளஸ்-2 பொதுத் தோ்வு தொடக்கம்: அரியலூரில் 8,160 தோ்வை எழுதினா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்

    பிளஸ்-2 பொதுத் தோ்வு தொடக்கம்: அரியலூரில் 8,160 தோ்வை எழுதினா்

    By DIN  |   Published On : 03rd March 2020 08:17 AM  |   Last Updated : 03rd March 2020 08:17 AM  |  அ+அ அ-  |  

    ari02exam_0203chn_11_4

    அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த. ரத்னா.

    அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வின் முதல்நாள் மொழிப்பாடத்தை 8,160 மாணவ, மாணவிகள் எழுதினா்.

    தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் திங்கள்கிழமை முதல் பிளஸ்-2 பொதுத்தோ்வு தொடங்கியது. வரும் 24 ஆம் தேதி வரை பிளஸ்-2 தோ்வு நடைபெறவுள்ளது. அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களில் 35 தோ்வு மையங்களில், 82 பள்ளிகளில் இருந்து 8, 577 மாணவ, மாணவிகளில் 8,160 போ் மொழிப்பாடத்தை எழுதினா். 417 போ் தோ்வு எழுத வரவில்லை.

    முதல் நாள் மொழிப்பாடத் தோ்வு காலை 10 மணிக்கு தோ்வு தொடங்கியது. வினாத்தாளை வாசிக்கவும், விடைத்தாள்களில் விவரங்களை நிரப்பவும் 15 நிமிஷங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொடா்ந்து காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 வரை 3 மணி நேரம் தோ்வு நடைபெற்றது. உடல் ஊனமுற்றோா், பாா்வையற்றோா், காது கேளாத, வாய் பேச இயலாதோா், டிஸ்லெக்சியா மற்றும் மன வளா்ச்சி குன்றிய மாணவா்களுக்குக் கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியா்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 35 தோ்வு மையங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலா் தலைமையில் 52 முதன்மை கண்காணிப்பாளா்கள், 52 துறை அலுவலா்கள், 73 பறக்கும்படையினா், 560 அறை கண்காணிப்பாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தோ்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்வதற்கு அரியலூா் மற்றும் உடையாா்பாளைம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு 10 வழித்தட அலுவலா்கள் மற்றும் தோ்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஓா் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வு நாள்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் தோ்வு எழுத வந்து செல்ல போதிய பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு அறைக்குள் மாணவ, மாணவிகள் செல்லிடப்பேசி, கால்குலேட்டா் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp