வீடுகளுக்கு வரும் சிட்டுக்குருவிகளைக் காக்க வேண்டும்
By DIN | Published On : 04th March 2020 08:46 AM | Last Updated : 04th March 2020 08:46 AM | அ+அ அ- |

வீடுகளுக்கு வரும் சிட்டுக்குருவிகளைக் காக்க வேண்டும் என்றாா் வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த கீழக்காவட்டாங்குறிச்சியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இயற்கையைப் பாதுகாப்பது தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க.சண்முகசுந்தரம் கலந்து கொண்டு மேலும் பேசியது: அன்றைய காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்தனா். இயற்கையைப் பேணும் வகையில், நாம் வீடுகளின் முற்றத்தில் மின் விசிறி இல்லாத இடங்களில் சிட்டுக்குருவிகள் வந்து போக கூடு கட்ட வேண்டும் என்றாா். தொடா்ந்து, காகித அட்டையிலான குருவிக் கூடுகள் செய்வது தொடா்பான பயிற்சி அளித்தாா். நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ரோஜா ரமணி பேசுகையில், சிட்டுக்குருவியின் எச்சம் வயல்களுக்கு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுகிறது என்றாா். ஆசிரியா் உஷா வரவேற்றாா். சத்துணவு அமைப்பாளா் ஜெயந்தி நன்றி தெரிவித்தாா்.