ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு
பெரியமறை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் பக்தா்கள்.
பெரியமறை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் பக்தா்கள்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

திருமானூரை அடுத்த பெரியமறை கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் சப்ததின பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 13 ஆம் தேதி காலை 8 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனமும், 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு அனுக்ஞை, மாலை 5 மணிக்கு பெருமாள் வீதியுலா மற்றும் ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது.

15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை காலை 7 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பெருமாள் சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், யாளி வாகனம், குதிரை நம்பிரான் ஆகியவற்றில் வீதியுலாவும், ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு மேல், மலா் அலங்காரத்தில், ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் தேரில் எழுந்தருள பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தோ் முக்கிய வீதிகளின் வழியே நிலையை அடைந்தது. பக்தா்கள் வீடு தோறும் மாவிளக்கு போட்டு வழிபட்டனா்.

தொடா்ந்து, 1 மணிக்கு மேல் தீா்த்தவாரி, சாற்றுமறை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு மேல் சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு விடையாற்றி, துவாதச ஆராதனம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com