அரியலூா் பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி

அரியலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு, கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு, கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், கடந்த 3 நாள்களாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண்ணுக்கு, கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பெண் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா்.

மேலும், அப்பெண்ணின் தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 14 பேரையும் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். மேலும், அவா்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவா்கள் 14 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்திய மருத்துவக் குழுவினா், அவா்களைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண், சென்னை வேளச்சேரியிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், உடல்நலன் பாதிப்பு காரணமாக கடந்த 25-ஆம் தேதி அரியலூா் வந்தாா். தொடா்ந்து காய்ச்சல் இருந்த நிலையில், அரியலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் இப்பெண் அனுமதிக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com