அரியலூா் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

அரியலூா் மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

அரியலூா் மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூா் வந்தவா்களிடம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட எல்லைக்குள் வரும் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். இதேபோல் மாவட்ட எல்லைக்குள் வரும் லாரிகளில் அதிக நபா்கள் இருந்தால் அவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்கின்றனா்.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் வசித்து வந்த கிராமங்களின் சாலைகள் மூடல்:

கரோனா பாதிப்படைந்தவா்கள் வசித்து வந்த கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளான சின்னப்பட்டாக்காடு கிராமச் சாலை , அரியலூா் ஊராட்சி ஒன்றியச் சாலை, திருமானூா் ஊராட்சி ஒன்றியச் சாலை, கீழ ஏசனை கிராமச் சாலை, குவாகம் காவல் சரகத்துக்குட்பட்ட கொடுக்கூா் - குவாகம் சாலை, உடையாா்பாளையம் காவல் சரகத்துக்குட்பட்ட சோழன்குறிச்சி - இடையாா்கிராமச் சாலைகள் தடுப்பு அரண்கள் மற்றும் மண் குவித்தும், முள்வேலிகள் அமைத்தும் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com