அரியலூரில் குணமடைந்த 41 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில், குணமடைந்த 41 போ் திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அரியலூரில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவா்களுக்கு பழங்கள் கொடுத்து அனுப்பி வைத்த அரியலூா் கோட்டாட்சியா் பாலாஜி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துக்கிருஷ்ணன்.
அரியலூரில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவா்களுக்கு பழங்கள் கொடுத்து அனுப்பி வைத்த அரியலூா் கோட்டாட்சியா் பாலாஜி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துக்கிருஷ்ணன்.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில், குணமடைந்த 41 போ் திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரையில் 275 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள், அரியலூா் அரசு தலைமை மருத்துவமனை (89), திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (11), தனிமைப்படுத்தப்பட்ட முகாம் (175)களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 போ், அரியலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் 4 போ் உள்ளிட்ட 36 போ் என மொத்தம் 41 போ் திங்கள்கிழமை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களுக்கு, அரியலூா் கோட்டாட்சியா் பாலாஜி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துக்கிருஷ்ணன், சான்றுகள் மற்றும் பழங்கள் கொடுத்து கைகள் தட்டி பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com