அரியலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் பலத்த காற்றுடன் மழை பெய்தததால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
செந்துறையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.
செந்துறையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் பலத்த காற்றுடன் மழை பெய்தததால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மறுபுறம், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் நனைந்து போயுள்ளன.

அரியலூா் மாவட்டத்தில் நகா்ப்புறப் பகுதிகளான வாலாஜா நகரம், தாமரைக்குளம், தவுத்தாய்குளம், எருத்துக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மதியம் மிதமான மழை பெய்தது. இதேபோல், ஜயங்கொண்டம், செந்துறை, திருமானூா், உடையாா்பாளையம், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மானாவாரி கோடைப் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயன்அளிக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்...திருமானூரிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் நெல்மூட்டைகள் பல வாரங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் அனைத்து நெல்மூட்டைகளும் நனைந்துபோயின. இதனால் நெல் மணிகள் ஒரு நாள்களில் முளைத்து விடும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com