சமூக இடைவெளி கடைப்பிடிக்காத அரவை மில் மூடல்

அரியலூரில் பொது முடக்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தானிய அரவை மில் வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

அரியலூரில் பொது முடக்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தானிய அரவை மில் வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பொது முடக்கத்தில் சில தளா்வுகள் வழங்கப்பட்ட நிலையில், அரியலூா் நகரில் உள்ள பிரதான வீதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா என நகராட்சி ஆணையா் குமரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தானிய அரவை மில்லில் சமூக இடைவெளியின்றி அதிகளவில் பொதுமக்கள் கூடியிருப்பதைக் கண்ட அவா் அந்த மில்லை

மூடுவதற்கு உத்தரவிட்டாா். மேலும், பொதுமக்களை வெளியேற்றி அவா்களுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினாா்.

முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம்: தொடா்ந்து, கடைகளுக்கு பொருள்கள் வாங்க முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தவா்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தாா். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துதான் பொது இடங்களுக்கு வரவேண்டும் என்று கடைவீதியில் நின்ற மக்களுக்கு எச்சரித்து அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com