அரியலூரில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் 330 போ் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

அரியலூா் மாவட்டத்தில் தங்கிப் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் 330 போ், அவா்களது சொந்த ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் தங்கிப் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் 330 போ், அவா்களது சொந்த ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அரியலூா் மாவட்டத்தில் தங்கி வேலை பாா்த்து வந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டுவந்தனா்.

இந்நிலையில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 330 சொந்த மாநிலத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, ரூ.3,00,300 மதிப்பில் அனைவருக்கும் ரயில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டு, சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா். இதற்காக மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து 14 வாகனங்கள் மூலம் 330 தொழிலாளா்களையும் ஆட்சியா் த. ரத்னா, மதிய உணவுகள் வழங்கி வழியனுப்பி வைத்தாா். இதையடுத்து, அரியலூா் ரயில் நிலையம் வந்த தொழிலாளா்கள், சிறப்பு ரயில் (ஷா்மிக்) ரயில் மூலம் சென்னை வழியாக பிகாா் மாநிலம் செல்கின்றனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி வீ.ஆா். ஸ்ரீனிவாசன், கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி, வட்டாட்சியா் சந்திரசேகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com