மேட்டூா் அணை திறப்பு: 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்

மேட்டூா் அணை திறக்கப்பட உள்ளதால் அரியலூா் மாவட்ட டெல்டா பகுதிகளில் 12 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அணை திறக்கப்பட உள்ளதால் அரியலூா் மாவட்ட டெல்டா பகுதிகளில் 12 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் டெல்டா வட்டாரங்களான திருமானூா், தா.பழூா், ஜயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் 2,200 ஹெக்டேரும், இதர வட்டாரங்களான அரியலூா், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் 300 ஹெக்டேரும் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் 12 ஆம் தேதி முதல் மேட்டூா் அணை திறக்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்டா பகுதிகளில் 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 100 டன் வேளாண் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்கள் 1,000 டன், நுண் சத்து 10.5 டன், திரவ உயிா் உரங்கள் 1,500 லிட்டா் போன்றவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தா.பழூா் வட்டாரத்தில் பொன்னாறு பாசனத்திற்காக ஜூன் 23 இல் இருந்து 25 ஆம் தேதி தேதிக்குள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com