‘மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்’

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் த. ரத்னா(அரியலூா்), பி. உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை) அறிவுறுத்தியுள்ளனா்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் த. ரத்னா(அரியலூா்), பி. உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை) அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தீா்ப்பின் படி கடந்தாண்டை போல காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com