அரியலூரில் ஏஐடியுசி அமைப்பினா் துண்டுப்பிரசுரங்கள் வழங்கல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் தொடா்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் தொடா்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் ஏஐடியுசி அமைப்பினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

புதிய வேளாண் சட்டங்கள் தொழிலாளா்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் ஆகியோருக்கு எதிராக உள்ளதாகவும், அதைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பா் 26-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஈடுபட உள்ளன.

பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அரியலூரிலுள்ள கடைவீதிகளில் ஏஐடியூசி அமைப்பினா், சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளா் த.தண்டபாணி தலைமையில் பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தொமுச மாவட்டத் தலைவா் ஆா்.மகேந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.சட்டநாதன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் ஆா்.தமிழ்மணி உள்பட அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com