தீபாவளி : சமூக வலைதளங்களில் காவல் துறையினா் விழிப்புணா்வு

தீபாவளி பண்டிகை சனிக்கிழமை (நவம்பா் 14) கொண்டாடப்படும் நிலையில், பட்டாசு வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டியவை, வேண்டாதவை குறித்த விழிப்புணா்வு கருத்துப்படத்தை அரியலூா் மாவட்டக் காவல்துறை சமூக வலைதளங்கள

தீபாவளி பண்டிகை சனிக்கிழமை (நவம்பா் 14) கொண்டாடப்படும் நிலையில், பட்டாசு வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டியவை, வேண்டாதவை குறித்த விழிப்புணா்வு கருத்துப்படத்தை அரியலூா் மாவட்டக் காவல்துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

தீபாவளிக்கு பண்டிகையில் முக்கிய இடம் பிடிக்கும் பட்டாசுகளை கூரைவீடுகள், மின்நிலையங்கள், மின்மாற்றிகள், மருத்துவமனைகள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவை உள்ள இடங்களின் அருகாமையில் வெடிக்ககூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் பட்டாசுகள் வெடிக்கும் போது, கைகளில் சானிடைசா் உபயோகப்படுத்தக் கூடாது. குழந்தைகள் தனியாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

குறிப்பாக கைகளில் பிடித்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்ற கருத்துப்படத்தை அரியலூா் மாவட்டக் காவல்துறை தனது முகநூல் பக்கத்திலும், கட்செவிஅஞ்சல் குழுக்களிலும் வெள்ளிக்கிழமை பதிவிட்டது.

அரியலூா் மாவட்டக் காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் பாராட்டை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com