சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிச. 15 கடைசி நாள்
By DIN | Published On : 16th November 2020 08:18 AM | Last Updated : 16th November 2020 08:18 AM | அ+அ அ- |

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பா் 15 கடைசி நாள் என்று திருமானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா. லதா தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் வட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா பருவத்தில் நெற்பயிரில் இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும்போது, பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்தவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். சம்பா பயிா் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமியம் தொகை ரூ.512 ஆகும். காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34,500 ஆகும். இத்திட்டத்தில் சம்பா நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதற்கு தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் பொது சேவை மையங்களில் பதிவுசெய்யலாம். இதற்கு தேவையான முன்மொழிவுபடிவம், அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.