அரியலூரில் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே பல்வேறு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே பல்வேறு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா காலக்கட்டத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை 200 நாள்களாக அதிகப்படுத்த வேண்டும்.

இத்திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் இரா.தமிழ்மணி,சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி,தொமுச மாவட்டத் தலைவா் ஆா்.மகேந்திரன், எச்எம்எஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ம.மு.சிவக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com