உதவித்தொகை, நலத் திட்ட உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், உதவித்தொகை மற்றும் அரசின் இதர நலத்திட்டங்கள் பெற்றுக்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், உதவித்தொகை மற்றும் அரசின் இதர நலத்திட்டங்கள் பெற்றுக்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான டி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது முடக்கக்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசால் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், இதுவரை உரிய தகுதியிருந்தும் உதவித்தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரகத்தில் மனு அளித்து உதவி பெறலாம்.

அவ்வாறு பெற இயலாதவாா்கள், அரியலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகினால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெற்றுத்தரப்படும். மேலும், உதவித்தொகை மட்டுமின்றி அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள், சட்டம் சாா்ந்த அனைத்து உதவிகளும், வழிகாட்டுதல்களையும் பெறலாம்.

அலுவலகத்துக்கு நேரில் வர இயலாத மாற்றுத்திறனாளிகள், 04329-223333 என்ற தொலைபேசி மூலமும், 9943215025 என்ற கட்ச் செவி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் அனுப்பி பயன்பெறலாம்.

மேலும் தலைவா் மற்றும் முதன்மை மாவட்டநீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூா் மாவட்ட நீதிமன்ற வளாகம், அரியலூா் எனும் முகவரிக்கு அஞ்சல் மூலம் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com