மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால், காய்ந்து போன மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால், காய்ந்து போன மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகள்:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ச.செங்கமுத்து: மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலாலும், மழை இல்லாததாலும் மக்காச்சோளப் பயிா்கள் காய்ந்துவிட்டன. எனவே அரியலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவுத் தலைவா் தங்க. சண்முக சுந்தரம்: வேளாண் மண்டலமாக அறிவித்த பகுதிகளில் மீண்டும் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து, அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் உபரிநீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு கொண்டு செல்ல கால்வாய் அமைக்க வேண்டும்.

அம்பேத்கா் விவசாய இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஆா். அம்பேத்கா் வழியன்: தற்போது சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி உரங்களை வழங்க வேண்டும்.

திருமழபாடி, திருமானூா், ஸ்ரீபுரத்தான்,அழகியமணவாளம், தூத்தூா், ஏலாக்குறிச்சியில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன்:வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், ஏரிகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளின் கரைகள் மற்றும் மதகுகள் உடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் தூத்தூா்.தங்க.தா்மராஜன்:மாவட்டத்தில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பால் அனைத்தையும் ஆவின் நிா்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும்.

விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு ஆட்சியா் த.ரத்னா பதிலளித்து பேசினாா். வேளாண் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com