இராம.கோபாலனுக்கு அஞ்சலி
By DIN | Published On : 02nd October 2020 06:06 AM | Last Updated : 02nd October 2020 06:06 AM | அ+அ அ- |

திருமானூா் எம்.ஜி.ஆா். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ராமகோபாலன் படத்துக்கு அஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினா்.
திருமானூா் எம்.ஜி.ஆா். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ராமகோபாலன் படத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயற் குழு உறுப்பினா் பாரதியாா் தலைமையில், அரியலூா் ஒன்றிய செயற்குழு உறுப்பினா் குடியரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சித்தாா்த்தன் மற்றும் பழனிவேல், ரவி உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல், செந்துறை பேருந்து நிலையம் அருகே ராமகோபாலன் படத்துக்கு கோட்டச் செயலா் ராஜசேகா் தலைமையில் மரியாதை செலுத்தினா்.
ஜயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பில் மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன் தலைமையில் இந்து முன்னணி நிா்வாகிகள் ராமகோபாலன் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.