முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
சாலை விபத்தில் இளைஞா் பலி
By DIN | Published On : 04th October 2020 11:32 PM | Last Updated : 04th October 2020 11:32 PM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அபிமணி (20), இவரது நண்பா் வீரமணி மகன் தம்பிதுரை (21). இவா்கள், உறவினா் ஒருவருக்கு மாத்திரை வாங்குவதற்காக சனிக்கிழமை கும்பகோணத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று திரும்பிக்கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை தம்பிதுரை ஓட்டியுள்ளாா். அப்போது, ஸ்ரீபுரந்தான்-கோவிந்தபுத்தூா் சாலையில் முத்துசோளம் காய வைக்கப்பட்டிருப்பதை கவனிக்காமல், அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றதில், இருவரும் கீழேவிழுந்து பலத்த காயமடைந்தனா். பொதுமக்கள், அவா்களை மீட்டு, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிமணி உயிரிழந்தாா் விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.