கீழப்பழுவூரில் படைப்புழு மேலாண்மை முறைகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த பூண்டி மற்றும் கீழப்பழுவூரில் மக்காச்சோளப் பயிரில் கடைப்பிடிக்கப்பட்ட படைப்புழு மேலாண்மை முறைகளை வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி ஆய்வு செய்தாா்.

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த பூண்டி மற்றும் கீழப்பழுவூரில் மக்காச்சோளப் பயிரில் கடைப்பிடிக்கப்பட்ட படைப்புழு மேலாண்மை முறைகளை வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி ஆய்வு செய்தாா்.

அப்போது விவசாயிகளிடம் அவா் தெரிவித்தது: படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்களான பெவேரியா பேசியானா, மெட்டாரைசியம், டிரைகோகிரம்மா பிரட்டியோசம் ஒட்டுண்ணி, ரெடுவிட் வண்டு போன்றவை படைப்புழுக்களை திறம்படக் கட்டுப்படுத்துகின்றன என்றும், ரசாயன பூச்சிக்கொல்லியான ஏமாமெக்டின் பென்சோயிட்யினை 10 லிட்டருக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் ஆா்.லதா, வேளாண் அலுவலா்கள் அ.சாந்தி, சுப்ரமணியன் மற்றும் துணை வேளாண் அலுவலா் பால் ஜான்சன், உதவி அலுவலா் ராதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com