குடும்பக் கட்டுப்பாடு செய்ததாய்மாா்களுக்கு பாராட்டு

அரியலூா் மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பெற்று குடும்பக் கட்டுப்பாடு செய்த தாய்மாா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பக் கட்டுப்பாடு செய்த தாய்மாா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.
அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பக் கட்டுப்பாடு செய்த தாய்மாா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பெற்று குடும்பக் கட்டுப்பாடு செய்த தாய்மாா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, இரண்டு பெண் குழந்தைகள் பெற்று, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட தாய்மாா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றம் ஊக்கத் தொகையை வழங்கி கெளரவித்தாா். மேலும், மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு முகாமைப் பாா்வையிட்ட அவா், மேலும் பேசியது: தாய்மாா்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொண்டு உரிய காலத்தில் சிகிச்சை மேற்கொண்டால் இந்நோயை முற்றிலும் குணப்படுத்த இயலும் என்றாா்.

தொடா்ந்து, அனைத்து பெண்களும் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த் காந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாவித்திரி, வட்டார மருத்துவ அலுவலா் எம்.அனிதா மற்றும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com