ஆக்கிரமிப்புக்குள்ளான கோயில் நிலம் மீட்பு
By DIN | Published On : 31st October 2020 12:08 AM | Last Updated : 31st October 2020 12:08 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து சிவன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
ஜயங்கொண்டத்தில் பழைமை வாய்ந்த செளந்தர நாயகி அம்பாள் சமேத சோழீசுவரா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்குள் உள்ள நந்தவன இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தாா். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நிலத்தை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை மாலை அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் போலீஸாா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட குழுவினா் ஈடுபட்டனா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன் கோயில் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம் எனக் கருதப்படுகிறது.