விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st October 2020 12:10 AM | Last Updated : 31st October 2020 12:10 AM | அ+அ அ- |

மக்காச்சோளம் பயிா்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு கேட்டு அரியலூா் மாவட்டம், அயன் சுத்தமல்லி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும், அதற்கான ஆவணங்களைப் பெற்று, பயிா்க் காப்பீடு செய்ய, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், காலக்கெடு வழங்கி பயிா்க் காப்பீடு செய்து தரவேண்டும் என்று முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு அப்பகுதி விவசாயி பழனியப்பன் தலைமை வகித்தாா். விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனா்.