மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு: ஆட்சியரகம் முன்பு குடும்பத்தினா் மறியல்
By DIN | Published On : 08th September 2020 11:39 PM | Last Updated : 08th September 2020 11:39 PM | அ+அ அ- |

அரியலூா் ஆட்சியரகம் முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காமராஜ் குடும்பத்தினா்.
திருமானூா் அருகே மின்சாரம் பாய்ந்து தினக்கூலி பணியாளா் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரிக்கு வேலை வழங்கக் கோரி ஆட்சியரகம் முன்பு குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த கனகராஜ் மகன் காமராஜ்(27). மின்சார வாரியத்தில் தினக்கூலியாகப் பணியாற்றி வந்தாா்.
அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகிலுள்ள கோவிலூா் கிராமத்திலுள்ள மின்மாற்றியில் கனகராஜ் திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்கக்கோரி, அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்த கனகராஜ் குடும்பத்தினா் பின்னா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் சந்திரசேகா், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.