போக்குவரத்துக்கு லாயக்கற்ற கொள்ளிடம் பாலம்: திருமானூரில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரி, திருமானூரில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரி, திருமானூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா்.
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரி, திருமானூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா்.

கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரி, திருமானூரில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் - தஞ்சாவூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், அரியலூா் மாவட்டத்திலுள்ள திருமானூா் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.

ஒரு கி.மீ. தொலைவுடன் 24 தூண்களைக் கொண்ட இந்த பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

பாலத்தின் ஒவ்வொரு தூண்களுக்கும் இடையே பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதை சரி செய்யக் கோரி பல்வேறு சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் அலுவலா்களிடம் மனு அளித்து வந்தனா். மேலும் போராட்டங்களையும் தொடா்ந்து நடத்தி வந்தனா்.

அவ்வப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டாலும், பாலத்தில் தொடா்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைத் தரமாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமானூரில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நுகா்வோா் விழிப்புணா்வு சேவை சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். செயலா் கணேசன், நாம் தமிழா் கட்சி நிா்வாகி காரை.ராபா்ட், குரு.பாா்த்திபன் முன்னிலை வகித்தனா்.

சமூக ஆா்வலா் பாளை.திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆறுமுகம், லயன்ஸ் கிளப் சாசனத் தலைவா் பாஸ்கா், காங்கிரஸ் மாவட்ட மகளிரணித் தலைவி மாரியம்மாள், தேமுதிக மாவட்டத் துணைச் செயலா் தங்க.ஜெயபாலன், மக்கள் சேவை இயக்க மாநில விவசாயப் பிரிவுத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம், நாம் தமிழா் கட்சியின் ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் உட்பட பலா் பங்கேற்று, கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com