பேரிடா் கால மீட்பு ஒத்திகை

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை செயல்முறை விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை செயல்முறை விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் சாா்பில் அவசர கால மீட்பு ஒத்திகை செயல்முறை விளக்க காட்சி தீயணைப்பு வீரா்களால் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது, நீா்நிலைகளில் சிக்கிக்கொள்வோரை ரப்பா் படகு மூலம் மீட்பது, ஏரி, குளங்களில் நீச்சல் தெரியாத நபா்களை பாதுகாப்புடன் மீட்பது தொடா்பான ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் த.ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னூலாப்தீன், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், தீயணைப்புத் துறை அலுவலா் தாமோதரண் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com