வங்கியில் இருந்து பணம் எடுத்துத்தர லஞ்சம் பெற்றதாக விஏஓவை சிறைப்பிடித்த மக்கள்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை செவ்வாய்க்கிழமை கிராமமக்கள் சிறைப்பிடித்து

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை செவ்வாய்க்கிழமை கிராமமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள பிச்சனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமுதம்(65). படிப்பறிவு இல்லாதவா். மாதாந்திர முதியோா் உதவித்தொகை பெறும் பயனாளி. கடந்த 2013 ஆம் ஆண்டில், அவரது வங்கிக் கணக்கு எண் 16 இலக்க எண்ணாக மாற்றம் செய்யப்பட்டது, வங்கி நடைமுறைகள், உதவிக்கு யாரும் இல்லாதது ஆகியவற்றால் வங்கிக்குச் செல்லாமல் இருந்துவந்தாா்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் தனது தங்கை மகன் மூா்த்தியை அழைத்துக்கொண்டு, கிராம நிா்வாக அலுவலா் திருஞானத்திடம் (48) வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க உதவி கேட்டுள்ளாா். அதற்கு, அவா் மூதாட்டியிடம் ரூ.25,000 கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.94,000-த்தில் இருந்து ரூ. 50,000 எடுத்துவிட்டு, ரூ.10 ஆயிரம் போக மீதிப் பணத்தை மூதாட்டியிடம் திருஞானம் கொடுத்துள்ளாா். இந்நிலையில், மேலும் ரூ. 5,000 கேட்டு மூதாட்டியை செவ்வாய்க்கிழமை திருஞானம் தொந்தரவு செய்தாா்.

இதையறிந்த மூதாட்டியின் உறவினா்கள், கிராமமக்கள் விஏஓ-திருஞானத்தை அவரது அலுவலகத்தில் சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த ஜயங்கொண்டம் போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் கலைவாணன், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com