கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

அரியலூா் மாவட்டம், கரைவெட்டி கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலய ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கரைவெட்டி கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலய ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பனைவிதைகளை நட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஏரியை சுற்றி 500 பனை விதைகள் நடப்பட்டன. இதில், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், அரியலூா் நகராட்சி ஆணையா் குமரன், கரைவெட்டி ஊராட்சி தலைவா் கணேசன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க சண்முக சுந்தரம், திருச்சி பசுமைப்படை பீனிக்ஸ் ரோட்டரி கிளப் நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள நீா்நிலைகளில் அந்தந்த பகுதி இளைஞா்களைக் கொண்டு 3 லட்சம் பனைவிதைகள் நடவு செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com