சிறந்த கிராம ஊராட்சி விருதுக்குஆண்டாங்கோவில் கிழக்கு தோ்வு

தேசிய அளவிலான சிறந்த ஊராட்சிக்கான விருதை பெற, கரூா் மாவட்டத்திலுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கரூா்,செப்.18: தேசிய அளவிலான சிறந்த ஊராட்சிக்கான விருதை பெற, கரூா் மாவட்டத்திலுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பூா்த்தி செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ள கிராம ஊராட்சிகள் மத்திய அரசால் தோ்வு செய்யப்பட்டு, அந்த ஊராட்சிக்கு தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சஷக்திகரன் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்த்து வைத்தல், வருவாய் இனங்களை பெருக்கும் வகையில் செயல்படுதல், ஊராட்சிக் கணக்குகளை சிறப்பாகப் பராமரித்தல், முறையாக கிராம சபைக் கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி 2018-19-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு கரூா் மாவட்டம், தாந்தோனிமலை ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி தோ்வு பெற்றுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடமிருந்து ரூ.15 லட்சத்துடன் கூடிய தேசிய விருதை ஊராட்சித் தலைவா் சே. சாந்தி பெறுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com