அரியலூா் சத்துணவு மையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 143 அமைப்பாளா்கள், 58 சமையலா்கள் மற்றும் 289 சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவிகளுக்கு பெண்கள் மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பூா்த்தி செய்து தங்களுக்கு தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் 22.09.2020 முதல் 30.09.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்: சத்துணவு அமைப்பாளா் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையலா் பணிக்கு 8 ஆம் வகுப்பு தோ்ச்சி, தோ்ச்சி பெறாதவா். சமையல் உதவியாளா் பணிக்கு 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்.

01.09.2020 ஆம் நாளன்று 21 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் எனில் 18 வயது பூா்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அமைப்பாளா் பணியிடத்திற்கு 4 சதவீதம் ஒதுக்கீடு அனுமதிக்கப்படும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com