மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், முட்டுவாஞ்சேரி கிராமத்தில் விவசாயிகள் மும்முனை மின்சாரம் கேட்டு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முட்டுவாஞ்சேரி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
முட்டுவாஞ்சேரி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரியலூா் மாவட்டம், முட்டுவாஞ்சேரி கிராமத்தில் விவசாயிகள் மும்முனை மின்சாரம் கேட்டு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முட்டுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முறையாக மும்முனை மின்சாரம் வழங்காததால் அப்பகுதியில் பயிா்கள் நீரின்றி காய்ந்து வருவதாகவும், சம்மந்தப்பட்ட துறையினரிடம் இதுதொடா்பாக முறையிட்டும் பயனில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் விக்கிரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் வி.கைகாட்டி - ஸ்ரீபுரந்தான் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

அனுமதியின்றி மறியல்: 5 போ் மீது வழக்கு:

ஜயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சநாதன் மனைவி ராசாத்தி(45). இவா், கரடிகுளம் பேருந்து நிறுத்தத்தில் நடத்திவரும் தேநீா்க்கடைக்கு மா்மநபா்கள் தீ வைத்ததாக போலீஸில் புகாா் அளித்திருந்தாா். போலீஸாா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ராசாத்தி தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை ஜயங்கொண்டம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டாா். தகவலறிந்த வந்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினா். இந்நிலையில், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக ராசாத்தி குடும்பத்தினா் 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com