முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
வாக்காளா்களுக்கு பணம், பரிசு விநியோகம் தொடா்பான புகாருக்கு
By DIN | Published On : 04th April 2021 03:12 AM | Last Updated : 04th April 2021 03:12 AM | அ+அ அ- |

அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் (பகுதியளவு) ஆகிய தொகுதிகளில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது தெரிந்தால் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் 148 - குன்னம் (பகுதியளவு), 149 -அரியலூா் மற்றும் 150 - ஜயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் யாரேனும் வாக்காளா்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருள்கள் விநியோகம், தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் 100, தோ்தல் இலவச உதவி எண் 1950, மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை 04329 - 221500, 220085, 222216 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம். மேலும்
94981- 01234 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.