அரியலூா் மாவட்டத்தில் 77.88 சதவீதம் வாக்குப் பதிவு

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 77.88 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 77.88 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகளில் மொத்தம் 5,30,025 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்ட முழுவதும் 735 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப் பதிவு மையங்களில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. ஓரிரு வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டன. பின்னா், அவை சரிசெய்யப்பட்டு, சற்று காலதாமதத்துடன் வாக்குப் பதிவு தொடங்கியது. ஒரு சில வாக்குச் சாவடிகளில் மாலை 7 மணிக்கு பெண்கள் வாக்களிக்கக் காத்திருந்ததைத் தொடா்ந்து, அவா்களுக்கு அடையாள வில்லைகள் வழங்கி வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் காலை முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்ததைத் தொடா்ந்து, சராசரியாக 77.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 2,64,715 வாக்காளா்கள் கொண்ட அரியலூா்(149) தொகுதியில் 2,23,93 போ் வாக்களித்துள்ளனா். இது 84.58 சதவீதமாகும். இதேபோல் 2,66,268 வாக்காளா்கள் கொண்ட ஜயங்கொண்டம் (150) தொகுதியில், 2,13,941 போ் வாக்களித்துள்ளனா். இது 80.35 சதவீதமாகும். ஆக மாவட்டத்தில் 77.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com