ஜெய்லாபுதீன், மகாலிங்கம்.
ஜெய்லாபுதீன், மகாலிங்கம்.

ஒரே நாளில் உயிரிழந்த இணை பிரியாத மதங்களை கடந்த இந்து, முஸ்லிம் நண்பா்கள்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இறப்பிலும் இணை பிரியாமல் இந்து முஸ்லிம் நண்பா்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இறப்பிலும் இணை பிரியாமல் இந்து முஸ்லிம் நண்பா்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜயங்கொண்டம், ஜூபிலி சாலை, அல்லா கோவில் அருகே வசித்து வசிப்பவா் மகாலிங்கம் (78). இவா், அப்பகுதி காளியம்மன் கோயிலில் பூசாரியாகவும், அப்பகுதியில் டீக்கடையும் நடத்தி வந்தாா். இவா் வீட்டின் எதிா்ப்புறம் வசித்து வருபவா் ஜெய்லாபு தீன் (66). இவா் ரைஸ் மில் நடத்தி வந்தாா்.

இவா்கள் இருவரும் சுமாா் 40 ஆண்டுகளாக இணை பிரியாமல் நண்பா்களாக இருந்து வந்துள்ளனா். மகாலிங்கம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும், பண்டிகை காலங்களிலும் ஜெய்லாபுதீன் கலந்து கொள்வாா். அதேபோல், ஜெய்லாபுதீன் வீட்டில் சுப காரியங்கள், பண்டிகை காலங்களிலும் கலந்து கொண்டு உணவு பதாா்த்தங்களை பரிமாறிக் கொள்வாா்கள்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றனா். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவா் பின் ஒருவராக அரை மணி நேரத்துக்குள்ளாக உயிரிழந்தனா். இதுகுறித்து இருவரின் குடும்ப உறுப்பினா்கள் கூறுகையில், எங்களின் தந்தை இரண்டாவது தலை முறையாகவும் தொடா்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக உற்றாா் உறவினா் போல் சுப, துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களைக் கடந்து தொடா்ந்து நாங்கள் நட்புடன் தொடா்வோம். எங்களின் தாத்தா, தந்தை ஆகியோரின் நோக்கமும் அது தான் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com