அரியலூா் மாவட்டத்தில் நுங்கு விற்பனை அமோகம்

அரியலூா் மாவட்டத்தில் கோடை வெயிலைச் சமாளிக்கும் விதமாக நுங்குகளின் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
அரியலூா் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்கு வந்துள்ள நுங்கு.
அரியலூா் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்கு வந்துள்ள நுங்கு.

அரியலூா் மாவட்டத்தில் கோடை வெயிலைச் சமாளிக்கும் விதமாக நுங்குகளின் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அரியலூா் பேருந்து நிலையம், பெருமாள் கோயில் தெரு,செந்துறை சாலை,இதே போல் ஜயங்கொண்டம் பேருந்து நிலையம், ஆண்டிமடம் பேருந்து நிறுத்தம், மீன்சுருட்டி, திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை குத்தகைக்கு எடுத்தவா்கள், நுங்கு பருவத்தைப் பாா்த்து வெட்டி மினி சரக்கு வேன்கள் மூலம் கொண்டு வந்து சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா். 3 நுங்கு ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு கடை விரித்தால் மதியம் 2 மணிக்குள் விற்பனையாகி விடுகிறது. ஒவ்வொரு நுங்கு காய்களிலும் 3 கண் முதல் 4 கண் வரையில் நுங்கு இருக்கிறது. இவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com