அனுமதியின்றி மணல் அள்ளிய 3 போ் கைது
By DIN | Published On : 12th April 2021 12:26 AM | Last Updated : 12th April 2021 12:26 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கீழப்பழுவூரை அடுத்த பொய்யூா் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கீழப்பழுவூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதயைடுத்து போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு, ஜேசிபி மூலம் லாரியில் மணல் ஏற்றிய திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இருதயபுரத்தைச் சோ்ந்த மாா்டின் ஜோசப் (35), கரைவெட்டி பரதூா் சங்கா் (38), லால்குடியை அடுத்த வாத்தலையைச் சோ்ந்த மகேந்திரன் (29) ஆகியோரைக் கைது செய்தனா்.
மேலும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி இயந்திரம், லாரி உள்ளிட்டவைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.