ஜயங்கொண்டத்தில் நிறுவனப் பணியாளா்களிடம் சளி மாதிரிகள் சேகரிப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் உள்ள வணிக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் உள்ள வணிக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஜயங்கொண்டத்தில் உள்ள வணிக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை சாா்பில் நடமாடும் கரோனா தடுப்புப் பரிசோதனை குழுவினா் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தில் சக பணியாளா்களுக்கு திடீா் கரோனா பரிசோதனை செய்தனா். வணிக நிறுவன உரிமையாளா்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களிடமிருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜயங்கொண்டம் நடமாடும் மருத்துவக் குழு வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன் தலைமையில் மருத்துவா் உமா, சுகாதார ஆய்வாளா் பிரவின் குமாா், செவிலியா் மேகலா ஆகியோா் கொண்ட குழுவினரால் சீனிவாசன் நகா், மலங்கண் குடியிருப்பு, மேலக் குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com