ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி
By DIN | Published On : 12th April 2021 12:29 AM | Last Updated : 12th April 2021 12:29 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
செந்துறை அருகேயுள்ள பெருமாண்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் - ஞானாம்பாள் தம்பதியின் மகள் சிந்தனைச்செல்வி(14). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இவா், அப்பகுதியிலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றாா்.
வெகுநேரமாகியும் அவா், வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் பல இடங்களில் தேடியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இறங்கித் தேடிய போது, சிந்தனைச்செல்வி நீரில் மூழ்கி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. செந்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.