இளம்பெண் மாயம்
By DIN | Published On : 13th April 2021 11:18 PM | Last Updated : 13th April 2021 11:18 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள காக்காபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சநாதன். இவருடைய மகள் ஸ்ரீகலா (17). இவா் சுத்தமல்லியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள், அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீகலாவின் தாய் சுசீலா உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, ஸ்ரீகலாவை தேடிவருகின்றனா்.