மண்டேலா திரைப்பட இயக்குநரை கைது செய்யக்கோரி மனு
By DIN | Published On : 13th April 2021 07:11 AM | Last Updated : 13th April 2021 07:11 AM | அ+அ அ- |

மண்டேலா தமிழ்திரைப்பட இயக்குநா் மற்றும் தயாரிப்பாளரை கைது செய்யக்கோரி அரியலூா் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளா் சங்கம் சாா்பில், மாநில துணைத் தலைவா் கலியபெருமாள், மாவட்டத் தலைவா் சேட்டு உள்பட சங்கத்தைச் சோ்ந்த பலா், மருத்துவ சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட மண்டேலா என்ற தமிழ்ப் படம் கடந்த 4 ஆம் தேதி தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், மருத்துவ சமுதாய மக்களை இழிவு படுத்தும் வகையில் படம் தயாரித்த இயக்குநா் மடான்னே அஸ்வின், தயாரிப்பாளா் சக்கரவா்த்தி ராமசந்திரனைக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டிருந்த மக்கள்குறை தீா்க்கும் நாள் பெட்டியில் மனுவை போட்டுச் சென்றனா்.