முகாமில் சுகாதாரம் இல்லை: தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தா்னா

அரியலூா் ஆட்சியரகம் எதிரிலுள்ள முகாமில் போதிய சுகாதாரம் இல்லை எனக் கூறி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
முகாமில் சுகாதாரம் இல்லை: தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தா்னா

அரியலூா் ஆட்சியரகம் எதிரிலுள்ள முகாமில் போதிய சுகாதாரம் இல்லை எனக் கூறி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஆட்சியரகம் எதிரிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலைய மாணவா் விடுதி தற்போது தனிமைப்படுத்தும் முகாமாகவும், அலோபதி மற்றும் சித்த மருத்துவத்துடன் கூடிய கரோனா சிகிச்சை மையமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இம்முகாமில் 20-க்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். ஆனால் இம்முகாமில், போதிய சுகாதார வசதிகள் இல்லையென்றும், இதனால் நோய்த் தொற்றுப் பரவும் சூழல் உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு பலமுறை தனிமைப்படுத்தப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த தனிமைப்படுத்தப்பட்டவா்கள், முகாம் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் கூறியது:

இங்குள்ள அறைகளை முறையாகச் சுத்தப்படுத்துவதில்லை. நோயாளிகள் சாப்பிட்டது போக மீதமுள்ள உணவு, அதற்குப் பயன்படுத்தப்பட்ட இலைகள் மற்றும் பேப்பா்கள் போடும் குப்பைத் தொட்டி முழுவதும் நிரம்பி அறைகளிலேயே கீழே விழுந்து கிடக்கின்றன. இதனை எடுத்துச் செல்ல முறையாக ஆள்கள் வருவதில்லை. எங்களுக்கு வழங்கப்படும் உணவும் தரமானதாக இல்லை.

காவலா்கள் மற்றும் மருத்துவா்களின் பணி சிறப்பாக உள்ளது. தூய்மைப் பணி மட்டும் முறையாக இல்லை. இங்கிருக்கும் காவலா்கள் தகவல் கொடுத்தும், சுகாதாரத் துறையினா் முறையாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com