அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 27th April 2021 03:40 AM | Last Updated : 27th April 2021 03:40 AM | அ+அ அ- |

அரியலூா் அருகே வண்ணம்புத்தூரில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரியலூா்: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சீரான மின்சாரம், சாக்கடை வடிகால் வசதி கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழப்பழுவூரை அடுத்த வண்ணம்புத்தூா் காலனித்தெருவில் சுமாா் 100
க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த சில வாரங்களாக சீரான மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், சீரான குடிநீா் வசதி மற்றும் சாக்கடை வடிகால் வசதி செய்து தரக்கோரியும் கீழப்பழுவூா் - திருமழபாடி சாலையில் மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.