சித்திரை முழுநிலவு நாள்:கண்ணகி சிலைக்கு மரியாதை
By DIN | Published On : 27th April 2021 03:40 AM | Last Updated : 27th April 2021 03:40 AM | அ+அ அ- |

திருச்சி சாலையில் உள்ள கண்ணகி சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழ் அமைப்பினா்.
அரியலூா்: சித்திரை முழுநிலவு நாளையொட்டி அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் அமைப்பினா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
திருச்சி சாலையில் உள்ள கண்ணகி சிலைக்கு முனைவா் க.ராமசாமி, முத்துலட்சுமி, அறிவுமழை, தமிழ்க்களம் புலவா் அரங்கநாடன், அறம் செய் நண்பா் அரங்கன்தமிழ், பேராசிரியா் ஜெகநாதன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தசாமி, வழக்குரைஞா் மாரிமுத்து, பாரிவள்ளல். செல்வம், தனவேல், இளம்பரிதி, நேரு, கவிஞா் அறிவுமழை, மாணவா் திலீபன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முடிவில், தமிழ் களம் இளவரசன் நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுகளை அறம்செய் நண்பா்கள், தமிழ்களம் போன்ற தமிழ் அமைப்பினா்கள் செய்திருந்தனா்.