ஜயங்கொண்டம் கடைகளில் சோதனை: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜயங்கொண்டம் நான்கு சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தம், தா.பழூா் சாலை, விருத்தாசலம் சாலை, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள டீக்கடை, பெட்டிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையா் சுபாஷினி தலைமையில் ஊழியா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது , கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவைகளை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா், மீண்டும் அவற்றை விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரா்களுக்கு எச்சரிக்கை விடுத்தாா். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம், கரோனா தொற்று குறித்து எடுத்துக்கூறி, அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com