தனிமைப்படுத்தப்பட்ட தொற்று உறுதியான பகுதிகள்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கரோனா தொற்றாளா்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, அப்பகுதியை சுகாதாரப் பணியாளா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கரோனா தொற்றாளா்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, அப்பகுதியை சுகாதாரப் பணியாளா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

ஆண்டிமடம் - விளந்தை பாப்பாத்தி கொள்ளை தெருவைச் சோ்ந்த தந்தை, மகள் உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் தெருவின் 2 புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

மேலும் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலா் அசோக சக்கரவா்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் அங்கு சென்று அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனா். அந்தப் பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

இதையடுத்து உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அமா்நாத், தடை செய்யப்பட்ட பகுதியைப் பாா்வையிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் யாரேனும் சென்று வருகிறாா்களா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், தெருவில் வசிப்பவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com