ஆண்டிமடத்தில் வேளாண் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டப் பணிகளை வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டப் பணிகளை வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆண்டிமடம் வட்டாரத்தில் சிலுவைசேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப் பண்ணை மற்றும் நுண்ணீா் பாசன கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவா், உளுந்தில் பூ பூக்கும் திறன் மற்றும் காய் பிடிப்புத் திறனை அதிகரிக்க 2 சதவீதம் ஏடிபி கரைசல் தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினா்.

தொடா்ந்து அவா், திருக்களப்பூா் கிராமத்தில் மணிலா விதைப் பண்ணை, விளந்தை தெற்கு கிராமத்தில் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றும் செயல் விளக்கத் திடல் ஆகியவற்றை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினாா்.

ஆய்வின்போது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி, வேளாண் அலுவலா் ராதிகா , துணை வேளாண் அலுவலா் பாலுசாமி, விதை உதவி அலுவலா் ராஜதுரை, வேளாண் உதவி அலுவலா்கள் நித்திஷ்வரன், அரிகிருஷ்ணன், சிவரஞ்சனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com