மணல் கடத்தல் சம்பவத்தில் டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 08th August 2021 11:40 PM | Last Updated : 08th August 2021 11:40 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உடையாா்பாளையத்தை அடுத்த நாச்சியாா்பேட்டை பெரிய ஓடையில் மணல் கடத்துவதாக கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திர பிரசாந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், சுத்தமல்லி வருவாய் அலுவலரும் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை நாச்சியாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்தி, சோதனை செய்ய முயன்றனா்.
அப்போது அதன் ஓட்டுநா் டிராக்டரை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். டிராக்டரை சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரைப் பறிமுதல் செய்து, உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு, புகாா் அளித்துவிட்டுச் சென்றனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.